பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை, காபந்து அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்றைய தினம் பெரும்பாலும் காபந்து அரசாங்கம் அமைப்பதற்கு இடமிருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியில் இருந்து விலகுவார் என தெரிவிக்கப்படுகிறது. 15 அமைச்சர்களைக் கொண்டதாக அமைச்சரவைக் கொண்டதாக இந்த காபந்து அரசாங்கம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.