நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் பெண்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கப் பெறுவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்
இலங்கையில் சகல இனங்களும் ஒன்றாக இணைந்து சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கின்ற போதிலும், தற்போது அது தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெண்களே பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றனர். எனினும், அதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெறுமதியும், கௌரவமும் கிடைக்கப் பெறவில்லை. இது பாரிய பிரச்சினையாகும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். காத்தான்குடி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.