பிரதமருக்கும் – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, கட்சியின் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நேற்றிரவு பிரதமரைச் சந்தித்து, அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.