இலங்கையை ஒளிமயமான யுகத்திற்குக் கொண்டு செல்வதற்கான இயலுமை தமக்கு இருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறுகிறார்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியே தீர்மானிக்கும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தமது எதிர்கால அரசியலை தீர்மானிப்பது கொள்கைகளாலும், முன்மாதிரிகளினாலும் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோல, இலங்கையை ஒளிமயமான யுகத்திற்குக் கொண்டு செல்வதற்கான இயலுமை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.