இலங்கைக்கு பாதகமான விடயங்களுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று பிரான்ஸ் வலியறுத்தியுள்ளது.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இன்றி, இலங்கை தொடர்பான அனுபவங்களுக்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக எந்த வகையிலும் பிரான்ஸ் செயற்படுவதில்லை என தூதுவர் வலியுறுத்தினார். அஸ்கிரி பீடத்தின் மஹாநாயக்கர் அதி சங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்தன தேரருடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார். இலங்கையின் அபிவிருத்தின்கான பிரான்ஸின் ஒத்துழைப்பு தொடரும் என அவர் வலியுறுத்தினார்.
மாத்தளை பிரதேசத்தின் விவசாய அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குகிறது. கண்டி நகரின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஸில் பெரும்பாலானவர்கள் பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துகிறார்கள். கண்டி போன்ற நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான யோசனைகளும் முன்மொழியப்பட்டிருப்பதாக பிரான்ஸ் தூதுவர் கூறினார்