மக்களின் இறைமைக்காகவே அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்!
சட்டத்துறையும், நிர்வாகத்துறையும், நீதித்துறையும் தமது அதிகாரங்களை நாட்டின் நலனுக்காகவும், மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தின் பீடாதிபதி சட்டத்தரணி ராஜா குணரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் இருப்புக்கு மூன்று துறைகள் மீதும் மக்களின் நம்பிக்கை ஏற்படுவது அவசியமாகும். சம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுமாயின், நாட்டில் அராஜக நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இன்று காலை இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் அவர் கருத்து வெளியிட்டார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் கருத்துக்கு இடமளிப்பது அவசியமாகும்.
மேற்கு நாடுகளின் மாதிரிகளை நாட்டில் ஏற்படுத்த முயன்று வருபவர்கள் பற்றி மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள் என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அஜித் திஸாநாயக்க கூறினார்.