நாட்டில் தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
நாட்டில் தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்; என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நவீன டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி பற்றி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை கூறினார். தொழில்நுட்ப யுகத்தில் புதிய கைத்தொழில் தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இலங்கையை ஏற்றுமதி கேந்திர நிலையமாக மாற்றுவது எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
குறித்த கண்காட்சி இந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. ஸைபர் கட்டமைப்பு, ரோபோ தொழில்நுட்பம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி இலங்கையின் கைத்தொழில் துறைக்கு நவீன தொழில்நுட்பம் இந்தக் கண்காட்சியின் ஊடாக அறிமுகப்படுத்தப்படும். ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் 13 அமைச்சுகளின் பங்களிப்புடன் இந்தப்பணிகள் முன்னெடுக்கப்படும்.