உணவு உற்பத்தியில் தன்னிறைவை எற்படுத்துவதற்கு சகல அதிகாரிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு
நாட்டை உணவு உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்துவதற்கு விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் வழங்கும் ஒத்துழைப்புகளை பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராட்யுள்ளார். விவசாயத்துறையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வு முன்வைத்து, விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றுவது விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் தேசிய சங்கத்தின் தலைமையகம் மஹரகமயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். உணவு உற்பத்தியில் தன்னிறைவை எற்படுத்துவதற்கு சகல அதிகாரிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார்.