Sunday, December 3, 2023
உள்நாடுபிரதான செய்திகள்

நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

Share Button

.

போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவருவதைத் தடுப்பதற்காக முப்படையினருடன் இணைந்து அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐஸ் போதைப் பொருளை தடைசெய்யப்பட்ட பொருளாக கருதும் சட்டம் இயற்றல், கடற்படை, சுங்கத் திணைக்களம் ஆகிய பிரிவுகளைப் பலப்படுத்தி தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்தல் மற்றும் போதைப் பொருள் பகிர்ந்தளிக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளாபவர்களுக்கு  எதிராக விரைவாக சட்டத்தை அமுற்படுத்துவதற்கு மேல் நீதிமன்றத்தை ஸ்தாபித்தல் போன்றவற்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதிகளவான போதைப்பொருட்கள் கடல்மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவருவது தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் பிரிவினர் ஐஸ் போதைப்பொருள் பற்றி பல வருடங்களாக சமூகத்தை விழிப்புணர்வூட்டுவதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...