காட்டு யானைகள் தொடர்பான தொகை மதிப்பு அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ளது
யானைகள் தொடர்பான தொகை மதிப்பு அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவிருக்கின்றது. வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சில் அடுத்த வருடங்களுக்கான செயற்றிட்ட கூட்டத்தின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர இது பற்றிக் கருத்து வெளியிட்டார். நாட்டில் இறுதியாக 2011ஆம் ஆண்டில் யானைகள் பற்றிய தொகை மதிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் யானைகளின் எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்படுகின்றது. யானைகள் பற்றிய தொகை மதிப்பை மேற்கொள்வதற்கான போதியளவிலான ஆளணி வளங்கள் இல்லாமையினால் சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சுற்றுச் சூழலியலாளர்கள் ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.