சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை என லியனோல் மெஸ்ஸி தெரிவிப்பு
36 வருடங்களுக்குப் பின்னர் ஆர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை வென்றதன் பின்னர், சர்வதேச உதைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து தாம் ஓய்வு பெறப் போவதில்லை என லியனோல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவில் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே லியனோல் மெஸ்ஸி இதனை கூறியுள்ளார். அடுத்த வருடம் 36 வயதை எய்தவுள்ள, லியனோல் மெஸ்ஸி, தனது நாட்டுக்காக பல பணிகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.