உள்நாட்டு பால்மாவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது
பால் மாவின் விலையை அதிகரிப்பதாக சில இறக்குமதியாளர்கள் தெரிவித்தாலும், ஹைலண்ட் பால்மா மற்றும் ஏனைய நிறுவனங்கள் தமது பால்மா உற்பத்திகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என மில்கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரேணுகா பெரேரா தெரிவிக்கின்றார். உள்நாட்டு பால்மாவிற்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதால், பால்மா பாக்கெட்டுகளை விற்பனை செய்வதுடன், திரவ பாலையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அதிகரித்துள்ள வரிகள் மற்றும் செலவுகள் தமது நிறுவனத்தையும் பாதித்துள்ள போதிலும் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என ரேணுகா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.