44 ஆயிரம் மாணவர்களை இம்முறை பல்கலைக்கழங்களுக்கு இணைத்துக் கொள்ளவுள்ள நடவடிக்கை
.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 44 ஆயிரம் மாணவர்களை இம்முறை பல்கலைக்கழங்களுக்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இம்முறை புதிததாக நான்கு கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, மீள்பரிசீலனை மூலம் பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டு, இசட் ஸ்கோரில் மாற்றம் ஏற்படுமாயினும,; ஏனைய மாணவர்களின் வெட்டுப்புள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின் நேற்று முதல் எதிர்வரும் 30 தினங்களுக்குள் முறையீடு செய்யலாம்.