பாராளுமன்றத்தைப் போன்று ஏனைய துறைகளுக்குமான பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
பாராளுமன்றத்தைப் போன்று, ஏனைய துறைகளிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். பெண்களின் பிரச்சினைகள் பற்றி அனைவரும் கவனம் செலுத்துவது அவசியமாகும். அநாதை பிள்ளைகளுக்கும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் அவசியமான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தேவையானவர்களுக்கு மாத்திரம் சமுர்த்தியை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மேலும் முறையான விதத்தில் நடைமுறைப்படுத்த முடியும். மேலும் 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய பாடசாலைக் கட்டமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் ஏற்படுத்துவது அவசியமாகும்.
பிராந்தியத்தின் கல்வித்துறையின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றுவது அவசியம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி கருத்து வெளியிட்டார். தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது பற்றி ஆளும், எதிர்த்தரப்புக்கள் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.