நாடளாவிய ரீதியில் புதிதாக கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன
நாட்டில் புதிதாக பத்து கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட இருக்கின்றன. கைத்தொழில் பேட்டைகளின் அபிவிருத்திக்கென இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தற்சமயம் 33 கைத்தொழில் பேட்டைகள் இயங்கி வருகின்றன. தெரிவு செய்யப்பட்ட 21 கைத்தொழில் துறைகளுக்கென 21 ஆலோசனைக்குழுக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. கைத்தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. தேயிலை, தென்னை, றப்பர் போன்ற உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மூலம் இந்த ஆண்டு கூடுதலான வருமானத்தை ஈட்ட எதிர்பாரத்துள்ளதோடு அடுத்த ஆண்டில் கூடுதலான வருமான இலக்கை அடைந்து கொள்ளவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.