2023 ஆம் ஆண்டில் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவிருக்கும் மாணவர்களின் பாடசாலை வருகை
2023ஆம் ஆண்டில் கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைக்கு தோற்றுவிருக்கும் மாணவர்களின் பாடசாலை வருகை 80 சதவீதமாக இருக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும்; மாணவர்களுக்கு 80 சதவீதமான பாடசாலை வருகை கட்டாயமாக்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது. ஆனால் அடுத்த வருடம் முதல் 80 சதவீதம் மாணவர் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.