தென் கொரிய மீன்பிடித்துறை தொழிலுக்கான, கொரிய மொழிப் பரீட்சை விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கள் முதல் ஒன்லைனின் மூலம் வெளியிடப்படவுள்ளது 

Share Button

தென் கொரியாவில் மீன்பிடித்துறை தொழிலுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ஒன்லைனின் மூலம் வெளியிடப்படவுள்ளது.

இந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போதுகடவுச்சீட்டு கட்டாயம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குடிவரவுத் திணைக்களத்தின் அனுமதியுடன் இதுவரை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் விசேட திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படிகடவுச்சீட்டு இல்லாதவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலகங்கள் சிபாரிசு கடிதத்தைபரீட்சை கட்டணமாக அறவிடப்படும் 10 ஆயிரத்து 109 ரூபாவை நேரடியாக செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த சிபாரிசு கடிதத்தைகுடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து கடவுச்சீட்டை ஒரு நாள் சேவையின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். தேர்வுக் கட்டணம் செலுத்திய சீட்டைஒன்லைன் முறையில் ஸ்கேன் செய்து தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களை றறற.ளடடிகந.டம உத்தியோகபூர்வ இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...