சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான யோசனைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை

Share Button

..

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான யோசனைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளது. நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைக்கு தமது கட்சி எப்போதும் முன் நிற்கும் என அங்கு ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இந்த யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய சபையொன்றை அமைத்தல், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், அமைச்சரவையை மட்டுப்படுத்தல், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த யோசனையில் உள்ளடங்கியுள்ளன. இது குறித்து இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சந்திப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டை கட்டி எழுப்புவதற்காக சர்வதேச உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட்டி சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைப்பது அத்தியாவசியமாகும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும். நாட்டின் தற்போதைய நிலைமையை சமாளிப்பதற்காக நமது கட்சி ஆலோசனை வழங்கியதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...