இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர் தினேஷ் குணவர்தன சந்திப்பு
வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத் துறையில் முதலீடு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடினர்.
பிரதமரின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இலங்கையில் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்கும் உயர்ஸ்தானிகர் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தினார்.
தற்போது நிலவும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க, இலங்கைக்கு இந்தியா வழங்கிய பங்களிப்பிற்காக பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தௌரபதி முர்மு நியமிக்கப்பட்டதற்கும் பிரதமர் இதன்போது வாழ்த்து தெரிவித்தார்.