65 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல்எதிhவரும் ஒன்பதாம் திகதி நாட்டைவந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது

Share Button

இந்தியா வழங்கும் உதவின் முதற்கட்டமாக இந்த உரம் கடைக்கப்பெறுவதாக அமச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலானது இன்றிரவு நாட்டை வந்தடையவிரந்த நிலையில் சரற்ற காலநிலை காரணமாக அதன் வருகையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இவ்வாறு கொண்டுவரப்படவுள்ள உரம் அணைத்தும் நெல் உற்பத்திக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுமார் மூவாயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இலங்கை வரவுள்ள கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 6ஆம் மற்றும் 08ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த கப்பல் இலங்கை வந்தடைய இருந்தது.

எனினும், சீரற்ற வானிலை காரணமாக குறித்த கப்பலின் வருகை மேலும் தாமதமடையக்கூடும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டை வந்தடையலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் உலக வங்கிக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையாக குறித்த கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.

குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக மேலும் ஒரு எரிவாயு கப்பல் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...