வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு நியமனம் – உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கத் திட்டம்

Share Button

வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த வாழ்க்கைச் செலவு தொடர்பான உபகுழுவின் தலைவராக ஜனாதிபதி செயற்படவுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக பிரதமர், கடற்றொழில் அமைச்சர், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், விவசாய அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களின் தலைமையில் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...