அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் கேசைப் பெறுவதற்காக வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு நிறுவனம் பொதுமக்களைக் கேட்டுள்ளது. 6 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையை வந்தடையவுள்ளன. அடுத்த மாதம் 10ஆம் திகதி 25 ஆயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் மாலைதீவு கடல் எல்லையை வந்தடையவுள்ளது. அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் நாட்டிற்கு கேசை எடுத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.