தேநீர் அருந்துவதை வரையறுக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share Button

தேநீர் பாவனையை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாளாந்தம் இரண்டு தடவைகள் தேநீர் அருந்துவோர்அதனை ஒரு தடவையாக குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானின் சிரேஷ்ட அமைச்சர் அஹ்ஸன் இக்பால் அறிவித்துள்ளார். தேயிலை இறக்குமதிகாக பாரிய அளவிலான அந்நியச் செலாவணி செலவிடப்படுவதாகவும்இதனால்பாரிய அளவிலான அமெரிக்க டொலர்களை செலவிட நேர்ந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் மிகக் கூடுதலான தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாகிஸ்தான்கடந்த ஆண்டில் தேயிலை இறக்குமதிக்காக மாத்திரம் 600 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டிருந்தது. பாகிஸ்தானில் தற்சமயம் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அமைச்சர் அஹ்ஸன் இக்பால் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மொத்த சனத்தொகையில் ஒவ்வொருவரும் வருடாந்தம் சராசரியாக ஒரு கிலோகிராம் தேநீரை அருந்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...