நாட்டில் தங்கியுள்ள உக்ரேன் சுற்றுலா பயணிகளின் வீசாக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை.
ரஷ்ய – உக்ரேன் மோதல் காரணமாக தமது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் நாட்டில் தங்கியுள்ள உக்ரேன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பிலான விடயம் ஆராயப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்துடன் வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடியுள்ளது. சுற்றுலா அதிகார சபையின் தகவலுக்கு அமைய தற்சமயம் சுமார் நான்காயிரம் உக்ரேன் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல், சுமார் 11 ஆயிரத்து 500ற்கு மேற்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் இலங்கையில் தற்சமயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.