சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் சீனா அதிக ஆர்வம்.
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள சீனா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷென் ஹொங்க் தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாக இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஏற்றுமதியை அதிகரித்துக் கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் சிறந்ததாக அமையும். கடந்த தினம் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீ, இலங்கையில் உள்ள பிரதானிகளுடன் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு ஷென் ஹொங்க் தெரிவித்தார்.