சீரற்ற காலநிலையினால் 49 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக, 49 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
400 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அவற்றுள் 100 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அந்த மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இடி மின்னல் தாக்கங்களினால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர் அவற்றிலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.