கண்டி நகர நீர் முகாமைத்துவ வேலைத்திட்டம் பிரதமர் தலைமையில் மக்கள் மயப்படுத்தப்பட்டது
கண்டி நகர நீர் முகாமைத்துவத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மக்கள் பாவனைக்குக் கையளித்தார். அலரிமாளிகையிலிருந்து இணையத்தளத்தின் ஊடாக குறித்த செயற்றிட்டத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். வரையறுக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் நீர் முகாமைத்துவக் கட்டமைப்பை எதிர்காலத்தில் நாட்டிலுள்ள சகல பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த இருப்பதாக பிரதமர் இந்நிகழ்வின் போது தெரிவித்தார். சுற்றுலாத் துறையின் விரிவாக்கத்திற்கு இந்த வேலைத்திட்டம் பங்களிக்கும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.