ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு பிரதமரினால் தீர்வு முன்வைப்பு

Share Button

சம்பள பிரச்சினையை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தீர்வாக இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக் கொடுப்போம். அமைச்சரவை உபகுழு அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக செயற்படுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது.

ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதமர் தொழிற்சங்க பிரநிதிகளிடம் தீர்வு யோசனையை முன்வைத்தார்.

அதற்கமைய ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் யோசனைக்கு அமைய மூன்று கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க உத்தேச சம்பளத்தை  முதற் கட்டமாக 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாகவும், மிகுதி இரு பகுதியையும் 2023ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதே வருடத்தில் வழங்கவும் பிரதமர் யோசனை முன்வைத்தார்.

(தொடரும்…

ஆசிரியர்-அதிபர் ஆகியோரின் பிரச்சினைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் சம்பள பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும். என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

இதனிடையே, குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை இன்றைய தினம் அறிவிப்பதாக ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

===

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *