சீனாவிலிருந்து பசளையை தருவிப்பது தொடர்பில் சிக்கல் இருப்பின் விவசாய அமைச்சுக்கு அறிவிக்க சந்தர்ப்பம்

Share Button

சீனாவிலிருந்து பசளை தருவிக்கப் படுவது தொடர்பில் பிரச்சினை இருப்பின் விவசாய அமைச்சுக்கு அறிவிக்க முடியும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி பசலை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி சேதன பசையுடன் கூடிய செய்கை தொடர்பில் மேற்கொண்ட தீர்மானத்தை தீர்மானம் உடனடி தீர்மானம் அல்ல என அமைச்சர் குறிப்பிட்டார் அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார் விவசாயிகளுக்கு தேவையான வசதியை பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் கருத்து வெளியிட்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

 

பல வருடங்களின் பின்னர் லக் சதோச நிறுவனம் லாபமீட்டும் நிலைக்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

 

சுமார் 28 பில்லியன் ரூபா  நட்டத்தை எதிர்கொண்டுள்ள சப்போஸ் வினியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையுடன் இந்த நிறுவனத்தை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கூடுதலான முறைகேடுகள் இடம்பெறும் சதோச நிறுவனம் அண்மைக்காலங்களில் லாபமீட்டும் நிலைக்கு வந்துள்ளது. உலக சந்தையில் கூடுதலான விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக எரிசக்தி அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *