லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு கடந்த இரண்டு வருடங்களில் 1,100 கோடி ரூபா நட்டம் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் தலைவர் கூறுகிறார்..

Share Button

கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 1,100 கோடி ரூபாய் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க லிட்ரோ காஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டதாக நிறுவனத்தின் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான தேஷார ஜெயசிங்க தெரிவித்துள்ளார். உலக சந்தையில் காசின் விலை அதிகரித்த பொது மக்கள் மீது பெரும் சுமையை சுமத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். தேசிய வானொலியின் சிங்கள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிட்டார். தற்போது உலக தொற்றுக்கு மத்தியில் முழு உலகும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. உலக சந்தையின் நிலைமைக்கு நேரடியாக முகம்கொடுக்க வேண்டிய நிலை இலங்கைக்கு  ஏற்பட்டுள்ளது. விலை மற்றும் கப்பல் காப்புறுதி கட்டணத்தின் அடிப்படையில் உலக சந்தையில் காசின் விலை தீர்மானிக்கப்படுகின்றது. அண்மைக்காலம் வரை நாட்டில் கேஸ் விலையை நுகர்வோர் சேவைகள் அதிகார சபையே தீர்மானித்து வந்தது. இறுதியாக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அதிகார சபையினால் கேசின் விலை தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 12 தசம் 5 கிலோ கிராம் சிலிண்டரின் உயர்ந்த பட்ச சில்லரை விலை 1493 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் உலக சந்தையில் ஒரு தொன் காசின் விலை 363 டொலர்களாக பதிவாகி இருந்தது. அந்த காலப்பகுதியில் நாட்டில் ஒரு டொலரின் பெறுமதி 177 ரூபாவாகும்.

2007ஆம் ஆண்டில் இந்த மாதம் வரை உலக சந்தையில் ஒரு தொன் காசின் விலை 800 டொலர்கள் வரை அதிகரித்திருந்தது. கேஸ் சிலிண்டரை 1493 ரூபாவுக்கு அதிகாரசபை விற்பனை செய்தபோது நிறுவனத்திற்கு 1182 ரூபா நட்டம் ஏற்பட்டது. அரச நிறுவனம் என்ற வகையில் லிட்ரோ நிறுவனம் பலமாக இருந்ததனால் நிவாரணம் வழங்க முடிந்தது உலக சந்தை நிலைமைக்கு ஏற்ப இந்த சந்தர்ப்பத்தில் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும் தற்போதும் சட்டத்தை தாங்கிக்கொண்டேன் நிறுவனம் மக்களுக்கு காசை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் கேசின் விலை குறையும் போது அதன் பயனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *