இந்திய ராணுவ தளபதி ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்

Share Button

இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த நாராவன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இவர் சாலிய போற கஜபா படைப்பிரிவின் 32ஆவது நிறைவாண்டு நிகழ்வில் எதிர்வரும் வியாழக்கிழமை பங்கேற்பார் அங்கு அவருக்கு மகத்தான ராணுவ அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்திய ராணுவ தலைமை அதிகாரி நாராயண ராணுவ தலைமையகத்திற்கு நாளை விஜயம் செய்ய உள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *