மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை

Share Button

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள விசேட பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வது பற்றிய சட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்காக இந்த பாராளுமன்ற குழு நியமிக்கப்பட்டது. குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் இந்த குழு கூடியபோது இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது. மாகாண சபைகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக செயலிழந்து உள்ளமையினால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக குழுவில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். தனிநபர் ஒருவர் மாகாணசபையை நிர்வகிப்பது பொருத்தமானது அல்ல என்றும் அவர் கூறினார். எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது அவசியம் என அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டினார். இந்தத் தேர்தலை கலப்பு முறையில் நடத்த வேண்டும் என்பது பெரும்பாலான தரப்புகளின் எதிர்பார்ப்பாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *