நான்கு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் திறக்கப்படுகிறது

Share Button

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 கோடியே 86 லட்சத்து 64 ஆயிரத்து 271ஆக அதிகரித்துள்ளது. தொற்றின் காரணமாக 48 லட்சத்து 67 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளார்கள். 21 கோடியே 58 லட்சத்து 62 ஆயிரத்து 52 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்கள். கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக தொற்றாளர்கள் ரஷ்யாவில் உயிரிழந்துள்ளனர். அங்கு 962 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். அங்கு 34 ஆயிரத்து 574 பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

 

இதனிடையே, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுலில் இருந்த முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக அங்கு முடக்கநிலை அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *