அடுத்த வருடம் முழுவதும் இலங்;கை அணி பல கிரிக்கட் போட்டித் தொடர்களில் பங்கேற்கவுள்ளது

Share Button

அடுத்த வருடம் முழுவதும் இலங்கை கிரிக்கட் அணிக்கு பல கிரிக்கட் தொடர்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் சிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது. பெப்ரவரி மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. மார்ச் மாதம் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளது. மே மாதத்தில் பங்களாதேஷ் அணியுடன் இலங்கை அணி போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியுடன் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. ஜூன் மாத இறுதி அளவில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியுடன் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் மூன்றாம் கட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. செப்டெம்பர் மாதம் ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அடுத்த வருடம் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. நவம்பர் மாதத்தில் இலங்கை அணி நியூசிலாந்து பயணமாகவுள்ளது. அதனை அடுத்து, இலங்கை அணி டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *