அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள்

Share Button

அலரி மாளிகையில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.

 

பிரதமரும், புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

 

இவ்வழிபாடுகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது. பூஜை வழிபாடுகளில் இந்திய மத்திய அரசாங்கத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி பங்கேற்கவுள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *