அமைதிக்கான நொபெல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முராடோவ் ஆகிய ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பத்திரிகையாளரான மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்ய பத்திரிகையாளரான டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *