2050ஆம் ஆண்டை அண்மிக்கும் போது உலகளாவிய ரீதியில் 500 கோடி மக்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வர் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

Share Button

பருவநிலை மாற்றத்தினால் 2050ஆம் ஆண்டை அண்மிக்கும் போது உலகளாவிய ரீதியில் 500 கோடி மக்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்வர் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஐநாவின் உலக வானிலை அமைப்பு, தண்ணீருக்கான பருவநிலை சேவைகள் 2021 என்கின்ற தலைப்பில் ஆய்வை நடத்தி, அதன் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டின் பின்னர் 360 கோடி மக்கள் வருடத்தில் ஒரு மாதகாலம் தண்ணீருக்கான பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இதேவேளை, 2021ஆம் ஆண்டிற்கான ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகி, நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது, பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *