‘பிரான்ஸ் தேவாலயங்களில்’ இடம்பெற்று துஷ்பிரயோகங்கள் பற்றிய சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Share Button

பிரான்ஸ் நாட்டின் திருச்சபைகளில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்களினால் 2 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக் குழுவின் அறிக்கையில் இருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது பிரான்சில் உள்ள தேவாலயங்களில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானாரே மதகுருமாரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் இதில் பெரும்பாலானவர்கள் சிறவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுயாதீன விசாரணைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் கவலையளிப்பதாக பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் அறிவித்துள்ளார் இவ்வாறான சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்கான பிரான்சின் திருச்சபை 2018-ஆம் ஆண்டில் இந்த சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *