நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வியாபார நடவடிக்கையை மேம்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு

Share Button

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. வங்கியின் பணிப்பாளர் நாயகம் கொணேச் ஜொகோ யாமா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேற்று சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த வருடம் 75 கோடி டொலரை நிவாரணக் கடனான வழங்கியுள்ளது. அடுத்த வருடம் அதனை ஆயிரம் கோடி டொலர் வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சிறந்த பெறுபேறுகளையும் அவர் பாராட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *