உலக வெப்பமயமாதல் காரணமாக 14 சதவீதமான பவளப்பாறைகள் அழிவு

Share Button

உலக வெப்பமயமாதல் காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உலகின் பவளப் பாறைகளில் 14மூ ஆனவை அழிவடைந்துள்ளதாக பவளப்பாறைகளின் ஆரோக்கியம் பற்றிய ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது. கடலின் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்தால் நீரின் கீழ் உள்ள சூழல் முறையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பசுபிக் பவளப் பாறைகளும் அரேபிய தீபகற்பத்தை அண்டியுள்ள பவளப் பாறைகளும் ஆஸ்திரேலிய கருத்துக்கு அப்பால் உள்ள பவளப்பாறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக பவளப்பாறை கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட மதிப்பீட்டின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *