நெதர்லாந்து பிரதமரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை

Share Button

நெதர்லாந்து பிரதமர் Mark Rutte இன் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் உள்ள குற்றங்களை மேற்கொள்ளும் குழுவினரால் பிரதமர் மார்க் ரூட் தாக்கப்படுவதற்கு அல்லது கடத்தப்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விடயத்தை பாரதூரமான விடயமாக கருதி செயற்பட வேண்டும் என்று பிரதமரின் அலுவலகத்திற்கு பாதுகாப்பு பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தமது வீட்டில் இருந்து கால்நடையாக அல்லது சைக்கிள் மூலமாக அலுவலகத்திற்குச் செல்வது வழமையாகும். அவர் பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து செல்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *