அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை தேசிய பாடவிதானத்தில்; சேர்ப்பது பற்றி பரிசீலிக்குமாறு பிரதம கேட்டுள்ளார்

Share Button
  • மலையகத்தின் முதுபெரும் அரசியல்வாதியும்தொழிற்சங்கத் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றையும்அவரது சாதனைகளையும் தேசிய பாடசாலை பாடவிதானத்தில்சேர்ப்பது பற்றி பரிசீலிக்குமாறு பிரதம மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.கல்வியமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிற்கு பிரதமர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்இந்தக் கோரிக்கை இடம்பெற்றுள்ளது.

     

    தமது 60 வருடகால அரசியல் வாழ்க்கையில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்பல பதவிகளையும் பொறுப்புக்களையும் வகித்தவர். அவரது சேவைகள் கடல் கடந்தும் பிரபலம் பெற்றவையென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

     

    அமரர் தொண்டமானின் 108ஆவது ஜனன தினத்தை முன்னிட்டுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பாளருமான செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்றுஇந்தக் கடிதத்தை பிரதமர் எழுதியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *