டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணி வீரருக்கு பிரதமர் பாராட்டு.

Share Button

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியின்ஈட்டி எறிதல் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணி வீரரான தினேஷ் பிரியந்த ஹேரத் என்ற வீரருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

பிரிவினைவாதத்திற்கு எதிரானநாட்டை ஒன்றுபடுத்துவதற்கான யுத்தத்தின் போது தமது பொறுப்புக்களை உரியமுறையில் இராணுவ வீரர் என்ற ரீதியில் நிறைவேற்றிய இவர் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியிலும் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார். நாட்டுக்காக பாராலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதலாவது வீரராக இவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். கொரோனா  வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பல்வேறு சவால்களையும் தோற்கடித்து  நாட்டுக்கு இவர் தேடித் தந்த வெற்றி சகல இலங்கையர்களையும் மேலும் தைரியமூட்டுவதாக பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளைஇந்த வீரருக்கு விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி தொடர்பில் அனைத்து இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சி அடைய முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *