முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளார்

Share Button

முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர காலமானார். கொவிட் தொற்றுக்கு உள்ளானதால் இவர் கடந்த சில நாட்களாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். 65 ஆவது வயதில் இவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதித்த சந்தர்ப்பத்தில் இவர் கடும் தொற்றுக்கு உள்ளாகி இருந்தார். பின்னர் இவர் படிப்படியாக குணம் அடைந்து வந்தார். எனினும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *