மத்தியப் பிரதேச சட்டசபை: மூன்றாவது வேட்பாளர் பட்டியல் வெளியானது!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மூன்றாவது வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் இதுவரையில் மத்தியப்பிரதேசம் மாநில சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 2 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில்இ நேற்று(04) 13 பேர் கொண்ட மூன்றாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நவம்பர் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.