சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

Share Button

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் தொலைநோக்குக் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், சுயதொழில், வர்த்தக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சின் கீழ் சௌபாக்கியா அபிவிருத்தி செயற்குழு இதனை முன்னெடுக்கின்றது.
ழூ ழூ ழூ

கல்வி மறுசீரமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படாது தற்காலத்திற்குப் பொருத்தமான கல்வி முறையினை முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு.

கல்வி மறுசீரமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்குப் பொருத்தமான கல்வி முறையினை முன்வைக்க வேண்டும். அதைவிடுத்து அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவது பொருத்தமான அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் கூறினார். பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் ஏராளமானோர் அரச தொழில் வாய்ப்பினை எதிர்பார்க்கின்றனர். தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் பொருளாதாரப் பின்னணியை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை தயாரிப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

===

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...