முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொவிட் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறை அபுதாபியில் அறிமுகம்
முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொவிட் தொற்றை கண்டறியும் முறை அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இ.டி.இ ஸ்கேனர்கள் இந்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் தற்போது குறித்த பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிசோதனையினை நடைமுறைப்படுத்துவதற்காக சுமார் 20 ஆயிரம் பேரை மையப்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வில் மிகத் துல்லியமான முடிவு கிடைத்தது. இதன் காரணமாக குறித்த முறையினை நடைமுறைப்படுத்தியிருப்பதாக அபுதாபி சுகாதாரத்துறையின் செயலாளர் டாக்டர் ஜமால் மொஹம்மது அல் ஹாபி தெரிவித்துள்ளார்.