பயண கட்டுப்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை.
அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் பயண கட்டுப்பாட்டை வெற்றிகரமான முறையில் முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார். பயண கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி வீடுகளிலிருந்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.