ஐ.ம.சு.முன்ணணியின் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்ணணியின் கட்சித்தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளார்கள்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கருத்து வெளியிட்டார்.
சபாநாயகரை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் போது அடுத்த பாராளுமன்றம் கூட்டப்படும்போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமருக்கான ஆசன ஒதுக்கீடு, மற்றும் அவருக்கான அலுவலக ஒழுங்குகளைச் செய்யுமாறு ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக சபாநாயகர் தமக்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தாம் அரசியல் அமைப்பிற்கு அமைவாகவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்றவகையிலும் செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்ததாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறினார்.