சைனோபாம் இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிரர்வரும் எட்டாம் திகதி ஆரம்பம்.
நாட்டில் அடுத்த வருடம் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க உள்ளது. இதற்கான முதற்கட்ட வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகளை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டி குண்டசாலை பிரதேசத்தில் அமைக்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.
சினோபாம் இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.